science

img

விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது: இஸ்ரோ தலைவர் சிவன்

தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவின் தென்துருவப் பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக  கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில்  ஏவப்பட்டது. சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த சந்திராயன் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், நேற்று முன் தினம் அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது.
நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது  அதிலிருந்து சிக்னல் கிடைக்காமல் போனது. “லேண்டரிலிருந்து தகவல் தொடர்பு இழந்தது. கிடைத்துள்ள விபரங்கள்  பகுப்பாய்வு செய்யப்படுகிறது” என கட்டுப்பாட்டு அறையில் கலக்கமடைந்திருந்த விஞ்ஞானிகளுக்கு மத்தியில் கண்கலங்கியவாறு இஸ்ரோ தலைவர் டாக்டர்  சிவன் அறிவித்தார்.
இந்நிலையில், தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தெரிவித்துள்ளார். நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்த புகைப்படம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆனால் அதிலிருந்து தகவல் தொடர்பு எதுவும் கிடைக்கவில்லை இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

;